விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் வழிசெலுத்தல் பட்டிஇப்பக்கத்தின் தேக்கத்தை நீக்கதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொதொ
ஆண்டு நிறைவுகள்
பொசுனியா எர்செகோவினா1992உலகக் காட்டுயிர் நாள்கானா1957அனைத்துலக பெண்கள் நாள்லித்துவேனியா1990பை நாள்உலக நுகர்வோர் உரிமைகள் நாள்புனித பேட்ரிக்கின் நாள்புனித யோசேப்புஉலக வீட்டுக்குருவிகள் நாள்உலகக் கவிதை நாள்சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்உலக நீர் நாள்பாகிஸ்தான்குடியரசு1956அனைத்துலக காச நோய் நாள்இயேசு பிறப்பின் முன்னறிவிப்புவங்காள தேசம்விடுதலை நாள்1971செக் குடியரசுஆசிரியர் நாள்மால்ட்டா1979
(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Enu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());
விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்
< விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்
இப்போது 18:37 மணி புதன், மார்ச் 20, 2019 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
மார்ச் 1: பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)
1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
1896 – என்றி பெக்கெரல் (படம்) கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 28 – மார்ச் 2 – மார்ச் 3
மார்ச் 2:
1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
அண்மைய நாட்கள்: மார்ச் 1 – மார்ச் 3 – மார்ச் 4
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.
1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.
1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.
1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.
1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான "ஆத்திரேலியா சட்டம் 1986" நடைமுறைக்கு வந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 2 – மார்ச் 4 – மார்ச் 5
மார்ச் 4:
1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே (படம்) சிம்பாப்வேயின் முதலாவது கருப்பினப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 3 – மார்ச் 5 – மார்ச் 6
மார்ச் 5:
1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.
1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.
1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.
1931 – காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.
1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் (படம்) மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 4 – மார்ச் 6 – மார்ச் 7
மார்ச் 6: கானா - விடுதலை நாள் (1957)
1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1869 – திமீத்ரி மென்டெலீவ் (படம்) தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
அண்மைய நாட்கள்: மார்ச் 5 – மார்ச் 7 – மார்ச் 8
மார்ச் 7:
1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் (படம்) தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையை டாக்காவில் நிகழ்த்தினார்.
1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
1990 – கவியோகி சுத்தானந்த பாரதியார் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 6 – மார்ச் 8 – மார்ச் 9
மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்
1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1702 – ஆன் (படம்) இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 9 – மார்ச் 10
மார்ச் 9:
1500 – பெத்ரோ கப்ராலின் (படம்) கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.
1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 8 – மார்ச் 10 – மார்ச் 11
மார்ச் 10:
1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.
1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பளித்தனர்.
1977 – யுரேனசு கோளைச் சுற்றி வளையங்களை (படம்) வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக (படம்) உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 9 – மார்ச் 11 – மார்ச் 12
மார்ச் 11: லித்துவேனியா - விடுதலை நாள் (1990)
222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
1931 – சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு (படம்) ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 10 – மார்ச் 12 – மார்ச் 13
மார்ச் 12:
1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை (படம்) ஆரம்பித்தார்.
1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 11 – மார்ச் 13 – மார்ச் 14
மார்ச் 13:
1781 – செருமானிய வானியலாளர் வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.
1881 – உருசியப் பேரசர் இரண்டாம் அலெக்சாந்தர் (படம்) அவரது அரண்மனைக்கு அருகே அவர் மீது குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.
1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
1988 – உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.
1992 – கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 498 பேர் உயிரிழந்தனர்.
2013 – திருத்தந்தை பிரான்சிசு 266-வது திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்மைய நாட்கள்: மார்ச் 12 – மார்ச் 14 – மார்ச் 15
மார்ச் 14: பை நாள்
1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார்.
1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1883 – பொதுவுடைமையின் தந்தை, செருமனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்சு (படம்) இறப்பு.
1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.
1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாவுக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 13 – மார்ச் 15 – மார்ச் 16
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்
கிமு 44 – உரோமைப் பேரரசர் யூலியசு சீசர் (படம்) மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை மேலவை உறுப்பினர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
1564 – முகலாயப் பேரசர் அக்பர் "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.
1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.
1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.
1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.
1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 14 – மார்ச் 16 – மார்ச் 17
மார்ச் 16:
1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.
1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 15 – மார்ச் 17 – மார்ச் 18
மார்ச் 17: புனித பேட்ரிக்கின் நாள்
1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1957 – பிலிப்பீன்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே (படம்) உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
அண்மைய நாட்கள்: மார்ச் 16 – மார்ச் 18 – மார்ச் 19
மார்ச் 18:
1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் (படம்) வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.
அண்மைய நாட்கள்: மார்ச் 17 – மார்ச் 19 – மார்ச் 20
மார்ச் 19: புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா (மேற்கு கிறித்தவம்)
1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
1932 – சிட்னி துறைமுகப் பாலம் (படம்) திறந்து வைக்கப்பட்டது.
1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.
2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 18 – மார்ச் 20 – மார்ச் 21
மார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்
1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (படம்) தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 19 – மார்ச் 21 – மார்ச் 22
மார்ச் 21: உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்
1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் (படம்) ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.
1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 20 – மார்ச் 22 – மார்ச் 23
மார்ச் 22: உலக நீர் நாள்
1943 - இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஜெர்மனியரினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
1995 - சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் (படம்) விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
2005 - நடிகர் ஜெமினி கணேசன் இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 21 – மார்ச் 23 – மார்ச் 24
மார்ச் 23: பாகிஸ்தான் – குடியரசு நாள் (1956)
1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் (படம்) ராஜ்குரு, சுகதேவ் ஆகியோருடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டார்.
1940 – முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
1964 – யாழ்ப்பாணத்து யோக சுவாமிகள் இறப்பு.
2001 – ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 22 – மார்ச் 24 – மார்ச் 25
மார்ச் 24: அனைத்துலக காச நோய் நாள்
1882 - காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் (படம்) பெர்லினில் அறிவித்தார்.
1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
1965 - இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 23 – மார்ச் 25 – மார்ச் 26
மார்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு விழா (கிறித்தவம்)
1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் (படம்) கண்டுபிடித்தார்.
1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
அண்மைய நாட்கள்: மார்ச் 24 – மார்ச் 26 – மார்ச் 27
மார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)
1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச (ஆரம்ப சின்னம் படத்தில்) விடுதலைப் போர் ஆரம்பமானது.
2007 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது வான்புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அண்மைய நாட்கள்: மார்ச் 25 – மார்ச் 27 – மார்ச் 28
மார்ச் 27:
1892 - சுவாமி விபுலாநந்தர் பிறப்பு.
1964 - ஐக்கிய அமெரிக்காவின் சரித்திரத்தில் மிகப் பெரிய 9.2 ரிக்டர் நிலநடுக்கமும் அதையடுத்த ஆழிப்பேரலையும் பெரிய வெள்ளியன்று அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் (படம்) விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 26 – மார்ச் 28 – மார்ச் 29
மார்ச் 28: செக் குடியரசு - ஆசிரியர் நாள்
1979 - பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் ஐக்கிய அமெரிக்க சரித்திரத்தில் முதலாவது அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டது.
2005 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஆன்மிகவாதி வேதாத்திரி மகரிஷி (படம்) மறைவு.
அண்மைய நாட்கள்: மார்ச் 27 – மார்ச் 29 – மார்ச் 30
மார்ச் 29:
1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கள் பாண்டே (படம்) என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 28 – மார்ச் 30 – மார்ச் 31
மார்ச் 30:
1492 - ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1867 - அலாஸ்கா மாநிலத்தை 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் (படம்) பணம் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
1981 - அமெரிக்க அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து மார்பில் சுடப்பட்டார்
அண்மைய நாட்கள்: மார்ச் 29 – மார்ச் 31 – ஏப்ரல் 1
மார்ச் 31: மால்ட்டா - விடுதலை நாள் (1979)
1898 - ஈழத்தமிழ் அரசியல்வாதி தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம் பிறப்பு.
1917 – ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க கன்னித் தீவுகளை (படம்) டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச் 30 – ஏப்ரல் 1 – ஏப்ரல் 2
பகுப்பு:
- ஆண்டு நிறைவுகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.604","walltime":"0.892","ppvisitednodes":"value":11916,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":328392,"limit":2097152,"templateargumentsize":"value":8623,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 590.545 1 -total"," 49.74% 293.758 31 வார்ப்புரு:SelAnnivFooter"," 26.07% 153.945 31 வார்ப்புரு:Namespace_detect"," 21.33% 125.974 124 வார்ப்புரு:Nowrap"," 14.79% 87.323 155 வார்ப்புரு:MONTHNUMBER"," 14.50% 85.617 31 வார்ப்புரு:Navbar"," 12.82% 75.687 93 வார்ப்புரு:MONTHNAME/en"," 11.75% 69.381 1 விக்கிப்பீடியா:ஆண்டு_நிறைவுகள்/மார்ச்_1"," 7.95% 46.957 62 வார்ப்புரு:MONTHNAME"," 6.25% 36.888 1 விக்கிப்பீடியா:ஆண்டு_நிறைவுகள்/மார்ச்_5"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.088","limit":"10.000","limitreport-memusage":"value":1376506,"limit":52428800,"cachereport":"origin":"mw1248","timestamp":"20190320183754","ttl":3600,"transientcontent":true);mw.config.set("wgBackendResponseTime":98,"wgHostname":"mw1266"););