முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை) பொருளடக்கம் வாழ்க்கைக் குறிப்புகள் கிளமெண்ட் கொரிந்தியருக்கு எழுதிய மடல் இறப்பும் திருவிழாவும் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் விக்கிமூலம்: இணைப்பு வழிசெலுத்தல் பட்டிபுனித முதலாம் கிளமெண்ட்முதலாம் கிளமெண்ட் - எழுத்துப் படையல்கள்தொதொ
அமலோற்பவ அன்னைகார்மேல் அன்னைகுவாதலூப்பே அன்னைசகாய அன்னைசெபமாலை அன்னைபாத்திமா அன்னைபுதுமைப் பதக்க அன்னைலூர்து அன்னைஆபிரகாம்ஈசாக்குயாக்கோபுயோசேப்பு (யாக்கோபுவின் மகன்)யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)பேதுருஅந்திரேயாசெபதேயுவின் மகன் யாக்கோபுயோவான்பிலிப்புபர்த்தலமேயுதோமாமத்தேயுஅல்பேயுவின் மகன் யாக்கோபுயூதா ததேயுதீவிரவாதியாய் இருந்த சீமோன்மத்தியாவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்எழுபது சீடர்கள்அப்பொல்லோசில்வான்பர்னபாபிரிஸ்கில்லா மற்றும் அக்கில்லாதிமொத்தேயுதீத்துமகதலேனா மரியாள்ஸ்தேவான்முதலாம் ஆதேயோதாத்துஸ்மூன்றாம் ஏட்ரியன்முதலாம் அகாப்பெட்டஸ்ஆகத்தோமுதலாம் அலெக்சாண்டர்அனகிலேத்துஸ்அனிசேட்டஸ்முதலாம் அனஸ்தாசியுஸ்அந்தேருஸ்இரண்டாம் பெனடிக்ட்முதலாம் போனிஃபாஸ்நான்காம் போனிஃபாஸ்காயுஸ்முதலாம் கலிஸ்டஸ்முதலாம் செலஸ்தீன்ஐந்தாம் செலஸ்தீன்முதலாம் கிளமெண்ட்கொர்னேலியுஸ்முதலாம் தாமசுஸ்தியோனீசியுஸ்எலூத்தேரியுஸ்முதலாம் யூஜின்யூசேபியஸ்யுட்டீக்கியன்எவரிஸ்துஸ்ஃபேபியன்முதலாம் ஃபெலிக்ஸ்மூன்றாம் ஃபெலிக்ஸ்நான்காம் ஃபெலிக்ஸ்முதலாம் ஜெலாசியுஸ்முதலாம் கிரகோரிஇரண்டாம் கிரகோரிமூன்றாம் கிரகோரிஏழாம் கிரகோரிஹிலாரியுஸ்ஹோர்மிஸ்டாஸ்ஹைஜீனஸ்முதலாம் இன்னசெண்ட்முதலாம் யோவான்இருபத்திமூன்றாம் யோவான்இரண்டாம் யோவான் பவுல்முதலாம் ஜூலியுஸ்முதலாம் லியோஇரண்டாம் லியோமூன்றாம் லியோநான்காம் லியோஒன்பதாம் லியோலைனஸ்முதலாம் லூசியஸ்மர்செல்லீனுஸ்முதலாம் மர்செல்லுஸ்மாற்குமுதலாம் மார்ட்டின்மில்த்தியாதேஸ்முதலாம் நிக்கோலாஸ்முதலாம் பாஸ்கால்முதலாம் பவுல்பேதுருமுதலாம் பயஸ்ஐந்தாம் பயஸ்பத்தாம் பயஸ்போன்தியன்முதலாம் செர்ஜியுஸ்சில்வேரியுஸ்சிம்ப்ளீசியுஸ்சிரீசியஸ்முதலாம் சிக்ஸ்துஸ்இரண்டாம் சிக்ஸ்துஸ்மூன்றாம் சிக்ஸ்துஸ்சொத்தேர்முதலாம் ஸ்தேவான்நான்காம் ஸ்தேவான்முதலாம் சில்வெஸ்தர்சிம்மாக்குஸ்டெலஸ்ஃபோருஸ்முதலாம் அர்பன்முதலாம் விக்டர்வித்தாலியன்சக்கரியாசெஃபிரீனுஸ்சோசிமஸ்அம்புரோசுஅல்போன்சுஸ் லிகோரிஅத்தனாசியார்அலெக்சாந்திரியா நகர சிரில்அவிலாவின் தெரேசாஅவிலா நகரின் யோவான்எருசலேம் நகரின் சிரில்கிலேரிவாக்ஸ் நகர பெர்நாதுகேன்டர்பரி நகரின் அன்சலேம்சியன்னா நகர கத்ரீன்எபிரேம்சிலுவையின் யோவான்செசாரியா நகர பசீல்செவேலி நகர இசிதோர்தமாஸ்கஸ் நகர யோவான்தாமஸ் அக்குவைனஸ்நசியான் கிரகோரிபதுவை அந்தோனியார்பிங்கெனின் ஹில்டெகார்ட்பிரான்சிசு டி சேலசுபிரின்டிசி நகர லாரன்சுபீட்டர் கனிசியுபீட்டர் கிறிசோலோகுபீட்டர் தமியான்பெரிய ஆல்பர்ட்வணக்கத்திற்குரிய பீட்போய்டிலர்ஸ் நகர ஹிலாரிபொனெவெந்தூர்பெரிய கிரகோரிபெரிய லியோயோவான் கிறிசோஸ்தோம்ராபர்ட் பெல்லார்மின்லிசியே நகரின் தெரேசாஜெரோம்ஹிப்போவின் அகஸ்டீன்கிரகோரி நாரெக்
இத்தாலிய திருத்தந்தையர்கள்இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்முதலாம் நூற்றாண்டு பிறப்புகள்திருச்சபைத் தந்தையர்கள்99 இறப்புகள்
புனித பேதுருவிடமிருந்துபுதிய ஏற்பாட்டைத்புதிய ஏற்பாட்டுக்உரோமன் கத்தோலிக்க திருச்சபைலூதரன்பிலிப்பியர் 4:3முதலாம் கிளமெண்ட் - எழுத்துப் படையல்கள்
முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)
Jump to navigation
Jump to search
புனித முதலாம் கிளமெண்ட் Saint Clement I | |
---|---|
4ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | கிபி 92 |
ஆட்சி முடிவு | கிபி 99 |
முன்னிருந்தவர் | புனித அனகிலேத்துஸ் |
பின்வந்தவர் | எவரிஸ்துஸ் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | கிபி முதலாம் நூற்றாண்டு உரோமை, உரோமைப் பேரரசு |
இறப்பு | மரபுப்படி 99 அல்லது 101 இறப்பிடம்: கெர்சொனேசுஸ் டாவுரிக்கா (இன்றைய கிரிமேயா, உக்ரேய்ன்) |
கிளமெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
புனித முதலாம் கிளமெண்ட் (Saint Clement I) என்பவர் கத்தோலிக்க திருச்சபையால் நான்காம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இவரை "உரோமை நகர் புனித கிளமெண்ட்" என்று அழைப்பதும் உண்டு. இவர் தொடக்க காலத் திருச்சபையின் தலைசிறந்த இறையியல் வல்லுநராய் இருப்பதால் "முதல் திருத்தூதுத் தந்தை" (First Apostolic Father) என்றும் அறியப்படுகிறார்[1].
பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்புகள்
2 கிளமெண்ட் கொரிந்தியருக்கு எழுதிய மடல்
3 இறப்பும் திருவிழாவும்
4 ஆதாரங்கள்
5 வெளி இணைப்புகள்
6 விக்கிமூலம்: இணைப்பு
வாழ்க்கைக் குறிப்புகள்
முதலாம் கிளமெண்டின் வாழ்க்கை பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. தெர்த்துல்லியன் (சுமார் 166 - சுமார் 220)என்னும் பண்டைக்காலத் திருச்சபை எழுத்தாளர் கூற்றுப்படி, கிளமெண்டு புனித பேதுருவிடமிருந்து திருப்பொழிவு பெற்றார்; முதல் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் உரோமைத் திருச்சபையின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
- கிளமெண்ட் (இலத்தீன்: Clementus) என்னும் பெயர் இலத்தீனில் "பரிவுள்ளவர்" என்று பொருள்படும். எனவே, கிறித்தவ வழக்கில் இவரை "சாந்தப்பர்" என்றும் கூறுவதுண்டு.
தொடக்க காலத் திருச்சபை எழுத்தாளர்கள் பொதுவாக கிளமெண்டைப் புனித பேதுருவுக்குப் பின் மூன்றாம் அல்லது நான்காம் திருத்தந்தையாக வரிசைப்படுத்துகின்றனர். தெர்த்துல்லியன் கருத்துப்படி, கிளமெண்டு புனித பேதுருவுக்குப் பின் திருத்தந்தையாகப் பொறுபேற்றார். இக்குழப்பநிலை நிலவுவதற்கு ஒரு முக்கிய காரணம் முதல் நூற்றாண்டில் ஆயர் பதவி துல்லியமாக வரையறுக்கப்பட்டு, ஒரு மறைமாவட்டத்துக்கு ஒருவரே ஆயராக இருக்க முடியும் என்ற கருத்து தெளிவாக எழாததுதான்.
கிளமெண்ட் கொரிந்தியருக்கு எழுதிய மடல்
திருத்தந்தை முதலாம் கிளமெண்டின் எழுத்துப் படைப்பாக இன்று உள்ளது அவர் கொரிந்தியருக்கு எழுதிய மடல் ஆகும். அது சுமார் 96இல் எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டைத் தவிர்த்து, தொடக்க காலத்தில் உருவான எழுத்துப் படையல்களுள் இதுவே மிக்க பழமையானது ஆகும். கொரிந்து திருச்சபைத் தலைவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து அவர்களுள் சிலர் பதவிநீக்கப்பட்டனர். இச்சிக்கல் குறித்துத் தீர்ப்பு வழங்குவதாக கிளமெண்டின் மடல் உள்ளது. திருச்சபையில் "ஆயர்கள்" (கிரேக்கத்தில் episkopoi = கண்காணிப்பாளர்கள்), "மூப்பர்கள்" (Presbyteroi = குருக்கள்), "திருத்தொண்டர்கள்" (diakonoi = ஊழியர்கள்) என்னும் திருப்பணியாளர்கள் திருத்தூதர்களால் நியமிக்கப்பட்டவர்கள் ஆதலால் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்று கிளமெண்ட் எடுத்துக் கூறினார். ஆயினும் அவர் episcopoi, presbyteroi என்னும் சொற்களை வேறுபடுத்தாமல் பயன்படுத்துவதும் உள்ளது.
கிளமெண்டின் கடிதம் திருச்சபைகளில் புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் போலவே வாசிக்கப்பட்டது. ஆயர்கள் (மூப்பர்கள்) திருச்சபையில் திருத்தூதர்களிடமிருந்து வரும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்று வலியுறுத்திய முதல் வல்லுநர் கிளமெண்ட் தான்.
கிளமெண்ட் இரண்டாம் கடிதம் ஒன்றினையும் எழுதினார் என்றொரு மரபு உண்டு. ஆயினும் அண்மைக்கால அறிஞர்கள், அக்கடிதத்தை எழுதியவர் வேறொருவர் என்று கருதுகின்றனர்.
இறப்பும் திருவிழாவும்
நான்காம் நூற்றாண்டின் அளவில் தொடங்கிய ஒரு மரபின்படி, கிளமெண்ட் ட்ரேஜன் மன்னன் காலத்தில் தம் கிறித்த நம்பிக்கையை முன்னிட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் பிற சிறைக்கைதிகளுக்குக் கிறித்துவின் செய்தியை அறிவித்தார். பின்னர் அவரை ஒரு நங்கூரத்தில் கட்டி கடலில் ஆழ்த்திக் கொன்றுவிட்டார்கள்.
பல கிறித்தவ சபைகள் கிளமெண்டைப் புனிதராகப் போற்றுகின்றன. உரோமன் கத்தோலிக்க திருச்சபை, லூதரன் சபை, மற்றும் ஆங்கிலிக்கன் சபை அவரது விழாவை நவம்பர் 23ஆம் நாளும், கீழை மரபுவழாத் திருச்சபைகள் சில நவம்பர் 24, வேறு சில நவம்பர் 25 ஆகிய நாள்களில் கொண்டாடுகின்றன.
புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் "கிளமந்து" என்னும் ஓர் உடனுழைப்பாளர் பற்றிப் பேசுகிறார் (பிலிப்பியர் 4:3). அவர் திருத்தந்தை கிளமெண்டாக இருக்கலாம் என்று கி.பி. 3 மற்றும் நான்காம் நூற்றாண்டு ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அவர்களுள் ஒரிஜென், யூசேபியஸ், ஜெரோம் போன்றோர் அடங்குவர்.
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக்கால நூலின்படி, கிளமெண்ட் பேதுருவை அறிந்திருந்தார். கிரேக்க நாட்டில் ட்ரேஜன் மன்னனின் ஆட்சிக்கால மூன்றாம் ஆண்டில் (அதாவது கி.பி. 101இல்) இறந்தார்.
ஆதாரங்கள்
↑ புனித முதலாம் கிளமெண்ட்
வெளி இணைப்புகள்
விக்கிமீடியா பொதுவகத்தில் Clemens I என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
விக்கிமூலம்: இணைப்பு
முதலாம் கிளமெண்ட் - எழுத்துப் படையல்கள்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் அனகிலேத்துஸ் | உரோமை ஆயர் திருத்தந்தை 88–101 | பின்னர் எவரிஸ்துஸ் |
பகுப்புகள்:
- இத்தாலிய திருத்தந்தையர்கள்
- இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்
- முதலாம் நூற்றாண்டு பிறப்புகள்
- திருச்சபைத் தந்தையர்கள்
- 99 இறப்புகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.340","walltime":"0.458","ppvisitednodes":"value":1156,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":229559,"limit":2097152,"templateargumentsize":"value":2382,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":427,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 286.962 1 -total"," 30.01% 86.131 1 வார்ப்புரு:Infobox_Christian_leader"," 25.90% 74.331 1 வார்ப்புரு:Infobox"," 20.12% 57.727 1 வார்ப்புரு:Commons_category"," 15.32% 43.972 1 வார்ப்புரு:Lang-la"," 14.56% 41.772 1 வார்ப்புரு:LangWithName"," 13.78% 39.548 1 வார்ப்புரு:Lang"," 12.74% 36.553 1 வார்ப்புரு:Category_handler"," 11.12% 31.901 1 வார்ப்புரு:Commons"," 10.09% 28.961 3 வார்ப்புரு:Navbox"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.053","limit":"10.000","limitreport-memusage":"value":1755133,"limit":52428800,"cachereport":"origin":"mw1294","timestamp":"20190421025315","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0baeu0bc1u0ba4u0bb2u0bbeu0baeu0bcd u0b95u0bbfu0bb3u0baeu0bc6u0ba3u0bcdu0b9fu0bcd (u0ba4u0bbfu0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0ba8u0bcdu0ba4u0bc8)","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)","sameAs":"http://www.wikidata.org/entity/Q42887","mainEntity":"http://www.wikidata.org/entity/Q42887","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2011-07-31T21:15:20Z","dateModified":"2017-04-04T19:50:20Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/6/61/San_Clemente%2C_Papa%2C_por_Juan_Correa_de_Vivar.jpg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":181,"wgHostname":"mw1323"););