கர்தினால் குழு முதல்வர் பொருளடக்கம் தேர்தல் சிறப்பு உறிமைகள் திருத்தந்தையாக தேர்வான கர்தினால் குழு முதல்வர்கள் மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டி
கர்தினால்கள்கர்தினால் குழு முதல்வர்கள்திருச்சபைப் பட்டங்கள்
ஆங்கிலம்இலத்தீன்கத்தோலிக்க திருச்சபையின்கர்தினால்கள்12ம் நூற்றாண்டில்புறநகர் மறைமாவட்டங்கலில்திருத்தந்தை ஆறாம் பவுலினால் இரண்டாம் அருள் சின்னப்பரால்புறநகர் ஆலயநான்காம் அனஸ்தாசியுஸ்மூன்றாம் லூசியஸ்ஒன்பதாம் கிரகோரிநான்காம் அலெக்சாண்டர்ஆறாம் அலெக்சாண்டர்மூன்றாம் பவுல்நான்காம் பவுல்பதினாறாம் பெனடிக்ட்
கர்தினால் குழு முதல்வர்
Jump to navigation
Jump to search
கர்தினால் குழு முதல்வர் (ஆங்கிலம்:Dean of the College of Cardinals; இலத்தீன்: Decanus Sacri Collegii) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்கள் குழாமின் தலைவர் ஆவார். இப்பதவி 12ம் நூற்றாண்டில் நிருவப்பட்டது ஆகும். இப்பணிப்பொருப்பில் இருப்பவர் தலைவர் என அழைக்கப்பட்டாலும் மற்றக் கர்தினால்கள் மீது எவ்வித ஆட்சி உரிமையும் இவருக்கு கிடையாது; இவர் சரிநிகரானவர்கள் நடுவில் முதலிடம் பெறுபவர் என கருதப்படுகின்றனர்[1].
கர்தினால் குழு முதல்வராக தேர்வு செய்யப்படுபவருக்கு அவர் ஏற்கனவே கொண்டுள்ள மற்றொரு ஆலயத்தின் உரிமைத் தகுதியுடன், ஒஸ்திபா மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியும் அளிக்கப்படும். இதலால் முதல்வர் கர்தினால் ஆயர் அணியின் உறுப்பினராவார்.
பொருளடக்கம்
1 தேர்தல்
2 சிறப்பு உறிமைகள்
3 திருத்தந்தையாக தேர்வான கர்தினால் குழு முதல்வர்கள்
4 மேற்கோள்கள்
தேர்தல்
பொதுவாக நீண்ட நாள் கர்தினால் பணிபுரிந்தவரே முதல்வராக தேர்வு செய்ப்பட்டாலும், இவ்வாறு தேர்வு செய்யப்பட எவ்வித கட்டாயமும் இல்லை. வழக்கப்படி புறநகர் மறைமாவட்டங்கலில் நீண்ட நாள் கர்தினால் பணிபுரிந்தவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார். இது திருத்தந்தை ஆறாம் பவுலினால் 1917இல் சட்டமாக்கப்பட்டு 1965 வரை நடப்பில் இருந்தது. ஆயினும் இது இரண்டாம் அருள் சின்னப்பரால் நீக்கப்படு பின்வரும் பமுறை கடை பிடிக்கப்படுகின்றது.
முதல்வரின் பதவியிடம் காலியானால், புறநகர் ஆலய உரிமைத் தகுதி பெற்ற கர்தினால்கள் மட்டுமே, தங்கள் குழுவைச் சார்ந்த ஒருவரைக் குழாமின் முதல்வராகச் செயல்படத் தேர்ந்தெடுக்க முடியும்; இத்தேர்தலுக்குத் துணைமுதல்வர் இருந்தால் அவரோ அல்லது அவர்களில் வயதால் மூத்தவரோ தலைமை ஏற்பார்; தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை திருத்தந்தையிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். இம்முறைப்படியே துணைமுதல்வர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இப்பதவியில் இருப்பவர் தனது மரணம் வரையோ அல்லது பணி துறப்பு வரையோ கர்தினால் குழு முதல்வராக இருக்கலாம். இதிலிருந்து ஓய்வு பெற கட்டாய வயது வரம்பு இல்லை.
சிறப்பு உறிமைகள்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆயராக இல்லாதிருப்பின், அவருக்கு ஆயர்பட்டம் அளிப்பது கர்தினால் முதல்வருக்கு உரிய உறிமையாகும்.
திருத்தந்தையாக தேர்வான கர்தினால் குழு முதல்வர்கள்
கர்தினால் குழு முதல்வராக பணிபொறுப்பு வகிக்கும் போது திருத்தந்தையாக எட்டுபேர் தேர்வாகி உள்ளனர். அவர்கள்: நான்காம் அனஸ்தாசியுஸ், மூன்றாம் லூசியஸ், ஒன்பதாம் கிரகோரி, நான்காம் அலெக்சாண்டர், ஆறாம் அலெக்சாண்டர், மூன்றாம் பவுல், நான்காம் பவுல், பதினாறாம் பெனடிக்ட்.
மேற்கோள்கள்
↑ திருச்சபை சட்டம் 352 §1
பகுப்புகள்:
- கர்தினால்கள்
- கர்தினால் குழு முதல்வர்கள்
- திருச்சபைப் பட்டங்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.096","walltime":"0.134","ppvisitednodes":"value":99,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":1056,"limit":2097152,"templateargumentsize":"value":164,"limit":2097152,"expansiondepth":"value":11,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":298,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 94.142 1 -total"," 96.44% 90.790 1 வார்ப்புரு:Lang-la"," 92.67% 87.243 1 வார்ப்புரு:LangWithName"," 88.65% 83.460 1 வார்ப்புரு:Lang"," 83.80% 78.894 1 வார்ப்புரு:Category_handler"," 6.24% 5.878 1 வார்ப்புரு:ISO_639_name"," 3.50% 3.292 1 வார்ப்புரு:ISO_639_name_la"," 3.43% 3.226 1 வார்ப்புரு:Lang-en"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.018","limit":"10.000","limitreport-memusage":"value":695848,"limit":52428800,"cachereport":"origin":"mw1310","timestamp":"20190421030016","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b95u0bb0u0bcdu0ba4u0bbfu0ba9u0bbeu0bb2u0bcd u0b95u0bc1u0bb4u0bc1 u0baeu0bc1u0ba4u0bb2u0bcdu0bb5u0bb0u0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q449676","mainEntity":"http://www.wikidata.org/entity/Q449676","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2013-10-20T08:37:25Z","dateModified":"2015-06-26T15:38:40Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Sodano.jpg"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":133,"wgHostname":"mw1333"););